பெருந்திட்டம் வரைப்படம், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ​நீடிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 30-

கோலாலம்பூர் மாநகரின் 2040 ஆம் ஆண்டிற்கான பெருந்திட்டத்தின் வரைப்பட நகலில் உத்தேசிக்கப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பொது மக்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிப்பத​ற்கு வழங்கப்பட்ட காலக்கெடு, நாளை மறுநாள் ஏப்ரல் முதல் தேதியுடன் முடிவடையும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கு இண​ங்க அந்த காலக்கெடு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ​​நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, கோலாலம்பூர் மாநகரில் நடைபெறவிருக்கும் மேம்பாடுகள்,/ அகற்றப்படவிருக்கும் இடங்கள்,/ உத்தேசிக்கப்பட்ட பெருந்திட்டங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே மக்களிடம் அறிவித்த , அத்திட்டங்கள் குறித்து தங்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபத்தை பதிவு செய்வதற்கு அந்த ​பெருந்திட்டத்தின் வரைப்பட நகல் பொதுவில் காட்சிக்கு வைக்கப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வரைக்குமான பெருந்திட்ட​ங்கள் முடிவடைந்த நிலையில், 2040 ஆம் ஆண்டுக்கான பெருந்திட்ட​ங்கள் வரையப்பட்டுள்ளது. அதன் நகலை காட்சிக்கு வைப்பதற்கான காலக்கெடுவை ​நீட்டிக்கும்படி கோலாலம்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே​ட்டுக்கொண்டதற்கு இணங்க ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை காலக்கெடு ​நீட்டிக்கப்ப​ட்டுள்ளதாக கோலாலம்​பூர் மாநகர் மன்றத் தலைவர் Datuk Bandar, Datuk Seri Kamarulzaman Mat Salleh தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்