அந்த பரிந்துரை குறித்து அமைச்சரவை விவாதிக்கும்

கோலாலம்பூர், மே 15-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்வைத்துள்ள பரிந்துரை குறித்து அமைச்சவை விவாதிக்கக்கூடும் என்று அரசாங்கப் பேச்சாளர் பாஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் டத்தோஸ்ரீ அன்வார், நாடு திரும்பியப் பின்னர் இவ்விவகாரத்தை அமைச்சரவையில் விவாதிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சரான பாஹ்மி பட்சில் குறிப்பிட்டார்.

கட்டாருக்கு வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் அன்வார், தலைநகர் DOHA- வில் Bloomberg செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் நஜீப்பிற்கு எதிரான 1MDB வழக்கு விசாரணை முடிந்தப் பின்னர் அவரை வீட்டுக்காவலில் வைப்பது குறித்து மாமன்னர் பரிசீலிக்க வேண்டும் என்று தமது கருத்தை தெரிவித்து இருந்தது தொடர்பில் பாஹ்மி பட்சில் எதிர்வினையாற்றினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்