ஐந்து போலீஸ்காரர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா, மே 15-

கடந்த மாதம் சீனநாட்டுப் பிரஜையிடம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை கொள்ளையிட்டதாக உதவி கண்காணிப்பாளர் போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து போலீஸ்காரர்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

41 வயது போலீஸ் உதவி கண்காணிப்பாளர் பைசோல் இஸ்மாயில், கார்போரல் அந்தஸ்தில் உள்ள 39 வயது கைரில் அனுவார் சுலைமான், 35 வயது ஜைதி ஜமாலுதீன், 28 வயது அட்ராஃபில் அட்லான் ரோஸ்லான் மற்றும் 39 வயது அஹ்மத் ரோஹாபிஸ் அப்துல் ராணி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஐந்து போலீஸ்காரர்கள் ஆவர்.

இந்த ஐவரும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜு, ஜாலான் துன் அப்துல் ரசாக்- கில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் 20 வயது சீன நாட்டுப் பெண்ணான ஜாங் சென் சுவான் என்பவரை மடக்கி கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஐந்து போலீஸ்காரர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்