30 ஆயிரம் வெள்ளி நிதி உதவியை வழங்கினார் அமைச்சர்

பெட்டாலிங் ஜெயா, மே 15-

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா உத்திர காளியம்மன் ஆலயத்திற்கு வருகை புரிந்த மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், அந்த ஆலயத்தை வழிநடத்தி வரும் ஸ்ரீ கங்கை அம்மன் பக்தபெருமக்கள் சங்கத்திற்கு 30 ஆயிரம் வெள்ளி நிதி உதவியை வழங்கினார்.

ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நடத்துவதற்கும் , அப்பகுதியில் உள்ள தாமான் மேடான் மற்றும் டேசா ரியா பகுதியை சேர்ந்த B40 தரப்பைச் சேர்ந்த மக்களுக்கு உணவுக்கூடைகள் வழங்குதற்கும், ஆலயத்தை சுற்றியுள்ள கால்வாய்கள் மற்றும் சிறு சிறு சீரமைப்புப்பணிகளை மேற்கொள்தற்கும் இந்த நிதியை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைப்பதில் தாம் மகிழ்ச்சி கொள்வதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

30 ஆயிரம் வெள்ளிக்கான மாதிரி காசோலையை அமைச்சர் ஸ்டீவன் சிம், ஆலய நிர்வாகத் தலைவர் ராமு ஏதுமான் மற்றும் இதர பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்