அந்த யோசனையை ஜாக்கி வரவேற்கிறது

கோலாலம்பூர், மார்ச் 7 –

பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகத் தளங்களில் மதுபான டின்கள் மற்றும் மதுபான பாட்டில்களை முஸ்லிம் பணியாளர்கள், அவற்றை தொடாமல் விற்பனை செய்வதற்கு மதுபான டின்களுக்காக சுயசேவை இயந்திரங்கள் பொருத்துப்படும் திட்டத்தை இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான ஜக்க்கிம் வரவேற்றுள்ளது.

மதுபான பாட்டில்கள் அல்லது டின்களுக்காக சுயசேவை இயந்திரங்கள் பொருத்தப்படுவது மூலம் வாடிக்கையாளர்கள் சுயமாகவே பணம் செலுத்தி, அந்த மதுபான வகையை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு செய்வது மூலம் முஸ்லீம்களுக்கு தடை விதிக்கப்பட்ட அந்தப் பொருட்களை முஸ்மில் பணியாளர்கள் கையாளுவதற்கான சூழல் ஏற்படாது என்று இஸ்லாமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் சில்கில்பி ஹாசான் தெரிவித்துள்ளார்.

இது போன்ற வர்ததகத் தளங்களில் வேலை செய்யும் முஸ்லிம் பணியாளர்கள் மதுபான டின்களை எடுப்பது, தொடுவது போன்ற நடவடிக்கையினால் பல்வேறு அசெகரியத்திற்கு ஆளாகின்றனர் என்பதையும் துணை அமைச்சர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்