GOODYEAR தொழிற்சாலை அதிகாரப்பூர்வமாக மூடப்படுகிறது

சிலாங்கூர், மார்ச் 7 –

சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக கோலாலம்பூர் பெயர், அகற்றப்பட்டு, ஷா ஆலாம் பிரகடன்படுத்தப்பட்ட பிறகு, ரப்பர் தோட்டங்கள் நிறைந்த ஷா ஆலாம் பகுதியில் உருவான முதலாவது தொழில்பேட்டை பகுதியில், செயல்படத்தொடங்கி, கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பை வழங்கிய 50 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட வாகன டயர் தயாரிக்கும் ரப்பர் தொழிற்சாலையான Goodyear வரும் ஜுன் மாதம் 30 ஆம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக மூடப்படுகிறது.

பொன்விழாவை கொண்டாடும் குட் யேர் டயர் தயாரிப்புத் தொழிற்சாலை மூடப்படுவது மூலம் அதில் ஆகக்கடைசியாக பணியாற்றி வருகின்ற 550 தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.

குட் யேர் தொழிற்சாலை, குட் யென் பொர்வட் என்ற பெயரில் உருமாற்றம் காணும் அதேவேளையில் தனது செலவினத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஷா ஆலாமில் உள்ள தனது டயர் தயாரிப்பு தொழிற்சாலையை மூடுகிறது என்று அந்த நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைவர் நத்னலியல் மடராங் தெரிவித்துள்ளார்.

வாகன டயர் உற்பத்தியில் கால்பதித்த குட் யேர் தனது தொழிற்சாலையை மூடுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு, கனத்த இதயத்துடன் செய்யப்பட்டதாகும் எனறு அவர் வர்ணித்துள்ளார். .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்