அனைத்துலக மின்சார வாகன பந்தயத்தை ஏற்று நடத்துவதிலிருந்து விலகியது மலேசியா

செப்பாங், மே 20-

அனைத்துலக மின்சார வாகன பந்தயமான FORMULA E-PRIX GRAND FINAL-லை ஏற்று நடத்துவதிலிருந்து மலேசியா விலகிக்கொண்டுள்ளது.

FORMULA E பந்தயத்தின் உரிமையாளர், மலேசியாவில் அந்த பந்தயத்தை நடத்த அதிக தொகையை கோரிய வேளை, வர்த்தக ரீதியிலான கட்டணங்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கு மீறிய நிலையில் உள்ளதால், அம்முடிவு எடுக்கப்பட்டதாக, உள்நாட்டு நிறுவனமான SPORTS TECH HOLDINGS-சின் தலைமை நிர்வாக அதிகாரி வான் அகில் வான் ஹாசன் தெரிவித்தார்.

அத்துடன், அபோட்டியை FORMULA E தரப்பினர் KL CITY பந்தய தளத்தில் நடத்த விரும்பிய நிலையில், அதில் பல்வேறு நுட்ப ரீதியிலான சவால்கள் இருந்ததால், தங்கள் தரப்பு அதற்கு பதிலாக செப்பாங் அனைத்துலக பந்தய தளத்தை தேர்வு செய்தது.

அதன் காரணமாக, FORMULA E தரப்பினர் அதிக நிதியைக் கோரியதால், அரசாங்கத்திற்கு தொந்தரவு வழங்கக்கூடாது என்ற நோக்கில், அதனை ஏற்று நடத்துவதிலிருந்து தாங்கள் பின்வாங்கிக்கொண்டதாக வான் அகில் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்