தாய்லாந்திலிருந்து சுற்றுப்பயணிகளை ஏற்றிவரும் பேருந்துகள், உள்நாட்டினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

பெட்டாலிங் ஜெயா, மே 20-

தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளை ஏற்றிவரும் அந்நாட்டு பேருந்துகள், மலேசியாவில் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை தாங்கள் நன்முறையில் வரவேற்பதாக, மலேசியா சுற்றுலாத் துறையைச் சேர்ந்த வர்த்தக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தைச் சேர்ந்த பேருந்துகள், அவர்கள் அழைத்து வருகின்ற சுற்றுப்பயணிகளை, நாட்டில் உரிமம் வழங்கப்பட்ட தங்கும் விடுதிகளில் மட்டுமே தங்க வைக்க வேண்டும்.

மேலும், இங்குள்ள சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச்செல்ல, உள்நாட்டைச் சேர்ந்து சுற்றுலா துறைக்கான ஓட்டுநரை, அவர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும் எனவும் அத்தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

தங்களது அவ்விரு கோரிக்கைகள் ஒன்றும் புதிதானது அல்ல. ஏற்கனவே, அனைத்துலக நிலையிலான சுற்றுலா பயணங்களில், அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதாக அத்தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்