அனைத்துலக விருதை வென்றது BATANG KALI BAMBOO BRIYANI உணவகம்

பாதாங் காலி, பிப்ரவரி 29 –

மலேசியாவில் வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதரவையும், பாராட்டையும் பெற்று வரும் பாதாங் காலி பேம்பூ பிரியானி உணவகம், 2024 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக ஆசியான் விருதளிப்பு விழாவில் ” 2024 ஆம் ஆண்டிற்கான விருப்பமான உணவகம்” எனும் அனைத்துலக விருதை வென்றது.

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தோனேசியா, Bali, Aston Denpasar & Conference Center ரில் நடைபெற்ற “A Special Gala Award Event : Asean Winner Class Series 1” விருதளிப்பு விழாவில் விருப்பமான உணவகங்கள் விருதளிப்பு பிரிவில் “Favourite Restoran Awards 2024” எனும் அனைத்துலக விருதை பாதாங் காலி பேம்பூ பிரியானி உணவகத்தின் தோற்றுநர் குமரன் சுப்ரமனியம் மற்றும் பாதாங் காலி பேம்பு பிரியானி பி டவுன் நிர்வாகத்தை சேர்ந்த லேஷ்வானி னெடுன் செலியன் ஆகியோர் பெற்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, இரண்டு ஐரோப்பிய நாடுகள் உட்பட 10 நாடுகள் பங்கேற்ற அனைத்துலக ஆசியான் விருதளிப்பு விழாவில் 2024 இல் மலேசிய இந்திய உணவகங்கள் வரிசையில் பாதாங் காலி பேம்பூ பிரியானி உணவகம் இந்த அனைத்துலக விருதை வென்றதுடன் நற்சான்றிதழையும் பெற்று, உரிய கெளரவம் வழங்கப்பட்டுள்ளது..

உணவகங்களில் பரிமாற்றப்படும் உணவுகளின் மிகச்சிறந்த தரத்தின் அடைவு நிலை, சுவை, வாடிக்கையாளர்களை உபசரிக்கும் விதம், உணவகத்தின் தோற்றம் உள்ளிட்டு அனைத்துலக தரத்தை நிறைவு செய்யும் உணவக வரிசையில் பாதாங் காலி பேம்பூ பிரியானி உணவகம் மலேசிய இந்தியர்களின் மிகச்சிறந்த உணவகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பாதாங் காலி பேம்பூ பிரியானி உணவகத்திற்கு இது மூன்றாவது விருதாகும். அதேவேளையில் அனைத்துலக அளவில் இது இரண்டாவது விருதாகும். ஏற்கனவே சென்னையில் இந்த உணவகம் அனைத்துலக விருதை வென்றது.

பாதாங் காலி பேம்பூ பிரியானி உணவகத்திற்கு கிடைத்த இந்த இரண்டாவது அனைத்துலக விருதை மலேசிய இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக அதன் தோற்றுநர் குமரன் சுப்ரமனியம் நன்றிபெருக்குடன் குறிப்பிட்டார்..

மலேசிய இந்தியர்கள் வழங்கி வரும் வற்றாத ஆதரவினால்தான் இந்த அனைத்துலக விருதை பாதாங் காலி பேம்பூ பிரியானி உணவகத்தினால் பெற முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசிய இந்தியர்களுக்காக கிடைக்கப்பெற்ற அனைத்துலக விருது என்பதால் தங்களின் கோலாலம்பூர் பாதாங் காலி பேம்பூ பிரியானி உணவகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அவ்விருது காட்சிக்கு வைக்கப்படும். உணவக பணியாளர்களின் அனுமதி பெற்று, அந்த விருதுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் ஆதாங் காலி பேம்பூ பிரியானி உணவகம், இந்த அனைத்துலக விருதை வெல்வதை சாத்தியமாக்கிய உணவக பணியாளர்களான லாஹிருல் ரான்மால் பெரெரா, சவுமியா பெரெரா,மோனிர் அகமட்,ஸ்.கெ இமரான்,சடுன் டிலான்,கபிலா இன்டிகா மற்றும் செலிம் ரான ஆகியோருடன் இந்த மகிழ்ச்சியை நிர்வாகம் பகிர்ந்து கொள்வதாக குமரன் சுப்ரமனியம் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்