புகைபிடித்து டீச‌ல் நிரப்பிய பேருந்து ஓட்டுநர்

ஈப்போ, மார்ச் 1 –

பெஹ்ராங் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் புகைபிடித்து கொண்டு டீசல் நிரப்பும் 57 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்திருப்பதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் ஹஸ்னி மொகமட் நாசிர் தெரிவித்தார்.

இதுக்குறித்து பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளர் உள்நாட்டு வாணிபம், வாழ்கை செலவினங்கள் அமைச்சகத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக மொகமட் ஹஸ்னி குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய செயல் மற்றவர்களை பாதிப்பதுடன் பயனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மொகமட் ஹஸ்னி கூறினார்.

இவை புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு விதிமுறைகள் 2004 இன் கீழ் குற்றச்சாட்டப்படுவதுடன், குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10,000 வெள்ளி அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்