முகைதீன் மருமகனுக்கு கடைசி வாய்ப்பை வழங்கியது SPRM

கோலாலம்பூர், பிப்ரவரி 29 –

லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் இருக்கும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் டத்துக் ஶ்ரீ முகமட் அட்லான் பெர்ஹான் னுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று அறிவித்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மின் விசாரணைக்கு ஆஜராக தவறுவாரேயானால் அவர் ஆஜராகாமலேயே அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இந்நிலையில் முகைதீன் மருமருகனை ஸ்.பி.ர்.ம் தொடர்ந்து தேடி வருகிறது. அவர், தாயகம் திரும்பி, தனக்கு எதிராக நடைபெறவிருக்கும் வழக்கில் தன்னை தற்காத்துக்கொள்ள முனைய வேண்டும். இதுவே ஸ்.பி.ர்.ம் அவருக்கு வழங்கும் கடைசி வாய்ப்பாகும் என்று அஸாம் பாக்கி இன்று விளக்கினார்.

முகைதீனின் மருமகனை கைது செய்வதற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு விட்டது. அவரின் வருகையின்றி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு ஸ்.பி.ர்.ம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து நாடு திரும்ப மறுப்பாரோயானால் அவர் ஆஜராகாமலேயே அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வருவது ஸ்.பி.ர்.ம் மின் கடைசி தேர்வாக இருக்கும் என்று அஸாம் பாக்கி விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்