மிரட்டி பணம் பறித்தல், 5 போலீஸ்காரர்கள் கைது

பினாங்கு, புக்கிட் மெர்தஜாம், ஜாலான் பெர்மாடாங் டிங்கியில் கடந்த வியாழக்கிழமை தொழிற்சாலை ஊழியர் ஒருவரை மிரட்டி 4 ஆயிரத்து 500 வெள்ளியை பறித்ததாக கூறப்படும் MPV போலீஸ் ரோந்துக்கார் பிரிவைச் சேர்ந்த 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Seberang Perai Tengah மாவட்ட போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த
24 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து போலீஸ்காரர்களுக்கு எதிராக 27 வயது தொழிற்சாலை ஊழியர் ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று அந்த தொழிற்சாலை ஊழியர், தனது தோயோத்தா வியோஸ் காரில் பெர்மாடாங் டிங்கி சாலை- யிலிருந்து சிம்பாங் அம்பாட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவரை இரண்டு ரோந்து போலீஸ் கார்களில் ஐந்து போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் அந்த தொழிற்சாலை ஊழியரின் காரை சோதனையிட்டது போன்று பாவனை செய்து, போதைப்பொருள் என்று நம்பப்படும் ஒரு பொட்டலத்தை காரிலிருந்து மீட்டனர்.

எனினும் அந்த போதைப்பொருள் தன்னுடைய அல்ல என்று அந்த ஆடவர் வாதிட்ட போதிலும், தாம் கைது செய்யப்படாமல் இருக்க தங்களுக்கு பத்தாயிரம் வெள்ளியை கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர் என்று அந்த ஆடவர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டார்.

பின்னர் , அருகில் உள்ள வங்கிக்கு சென்று ATM இயந்திரத்திலிருந்து 4 ஆயிரத்து 500 வெள்ளியை மீட்டு, தனது கார் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் சம்பந்தப்படாத மற்றொரு போலீஸ்காரரிடம் ஒப்படைத்தாக அந்த தொழிலாளி தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்