அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது

ஜொகூர் பாரு, மே 17-

ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

போலீஸ் நிலையங்கள் மட்டுமின்றி உயர் பதவி வகிக்கும் பிரபலங்கள் மற்றும் இஸ்தானாவிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று ஐஜிபி தெரிவித்தார்.

இவ்விடங்களை பாதுகாப்பது போலீசாரின் கடமையாகவும், பொறுப்பாகவும் கருதப்படுவதால் பாதுகாப்புப்பணிகள் முழு வீச்சில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று டான் ஸ்ரீ ரசாருதீன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்