அன்வார்-ருக்கு மாற்றான பல தலைவர்கள் பி.கே.ஆர்-ரில் உள்ளனர்!

ஷாஹ் அலாம், ஏப்ரல் 09-

நாட்டின் பிரதமராவதற்கு தேவையான தகுதிகள் உடைய பல தலைவர்களை பி.கே.ஆர் கட்சி கொண்டுள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மிற்கு மாற்றாக கட்சி தலைவர் பொறுப்பையும் பிரதமர் பொறுப்பையும் ஏற்கும் வல்லமையை அவர்கள் கொண்டுள்ளதாக உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் தெரிவித்தார்.

மூத்த தலைவர்களான துணைத்தலைவர் ராபிஜி ரம்லி, பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ சைப்புடின் நசுட்டின் இஸ்மாயில், அடுத்தக்கட்ட தலைவர்களான சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருட்டின் ஸாரி, நூருல் இஜ்ஜாஹ் ஆகியோருடன் தாமும் தலைமைத்துவ ஆற்றலைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பி.கே.ஆர்-ரில் அன்வார்-ருக்கு பிறகு, ஆற்றல்மிக்க தலைவர்களுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என்றாரவர். பி.கே.ஆர் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 25 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில், அது தொடர்பில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்க்காணலில் நிக் நஸ்மி கலந்துக்கொண்டார்.

அவரிடம் அன்வார்-ருக்கு பிறகு, பி.கே.ஆர்-ரிலிருந்து நாட்டையும் கட்சியையும் வழிநடத்தக்கூடிய தலைவர் யார் என்று குறித்து வினவப்பட்ட கேள்விக்கு, அவர் அவ்வாறு பதிலளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்