தேசிய முன்னணியின் 80 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் தற்போது, பேரிக்காதான் நசியனால் வசம்! ஒங் கியான் மிங் கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப்ரல் 09-

கடந்தாண்டு நடைபெற்ற 6 மாநில சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்களின் போக்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தேசிய முன்னணி -பக்காத்தான் ஹாராப்பான் இடையிலான ஒத்துழைப்பு டிஏபி-க்கு மலாய் வாக்காளர்களின் ஆதரவை பெருக செய்துள்ளது.

ஆனால், தேசிய முன்னணி வசம் இருந்த 80 விழுக்காடு வாக்காளர்கள் தற்போது, பேரிக்காதான் நசியனால் -லுக்கு ஆதரவளிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, 3 தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.

டிஏபி போட்டியிட்ட 47 தொகுதிகளில், தேசிய முன்னணிக்கு ஆதரவளித்திருந்த மலாய் வாக்காளர்களில் ஐந்தில் நால்வர் தேசிய முன்னணியின் 80 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் தற்போது, பேரிக்காதான் நசியனால் வசம்! ஒங் கியான் மிங் கூறுகிறார்-லுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, 6 மாநில சட்டமன்ற தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான்-னும் தேசிய முன்னணியும் ஒன்றிணைந்து பரப்புரைகளை மேற்கொண்டிருந்தன. ஆனால், அவ்விரு கூட்டணிகளும் மலாய் வாக்காளர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக எவ்வளவு வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது என்பது கேள்விக்கு வித்திடுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் டிஏபி-யின் வாக்கு விகிதம் 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மலாய்க்காரர்களின் ஆதரவு 8 விழுக்காடும் சீனர்களின் ஆதரவு 2 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

அம்னோ இல்லாவிட்டாலும் வெற்றி பெறும் ஆற்றலை டிஏபி கொண்டிருந்தாலும், அக்கட்சி உடனான ஒத்துழைப்பின் கீழ், பல தொகுதிகளில் டிஏபி அதிக பெரும்பான்மையில் வென்றுள்ளதாக, ஒங் கியான் மிங் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்