அபராதத்தை நீக்க லஞ்சம் கேட்டதாக நம்பப்படும் அதிகாரி

பெட்டாலிங் ஜெயா, ஜன – 8,

கெடாவில் அமலாக்க நடவடிக்கையில் வழங்கப்பட்டலபராதத்தை ரத்து செய்ய 5,000 வெள்ளி லஞ்சம் கேட்டு வாங்கியதாக நம்பப்படும் உதவி நிர்வாக அதிகாரி ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

30 வயதுக்குள்ளான அந்த நபர், கட்டுமானப் பொருட்களுக்கான சான்றிதழைப் பெறாத குற்றத்திற்காக அபராதத்தை ரத்து செய்ய கடந்த 2022 இல் ஒரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து அந்த லஞ்சப் பணத்தை பெற்றதாக நம்பப்படுகிறது.

நேற்று மாலை 5.20 மணி அளவில் கெடா மாநில ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்த போது அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டார்.

இன்று தொடங்கிய தடுப்புக் காவல், ஜனவரி 13 ஆம் தேதி வரை நீடிக்கும் என மஜிஸ்திரேட் முகம்மட் ஸுல் ஹில்மி லத்திஃப் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்