இந்திய வெங்காய விலையை அமைச்சும் FAMA கண்காணிக்க வேண்டும்

ஜோர்ஜ் டவுன், ஜன – 8,

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு குறித்து மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் FAMA, உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு KPDN  ஆகியவற்றை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பயனீட்டாளர்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும் வகையில் அந்த விலை அதிகரிப்பு இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் மொகிதீன் அப்துல் காதர்r குறிப்பிட்டார்.

கிறிஸ்துமஸ் காலத்தில் ஒரு கிலோ வெங்காயம் 5 வெள்ளி வரை விற்கப்பட்டது. ஆனால், தற்சமயம் பினாங்கு மாநிலத்தில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட வெங்காயம், கிலோ ஒன்றுக்கு 9 வெள்ளி வரை விலை அதிகரித்திருப்பதாக அவர் சொன்னார்.

எனவே அரசாக்கம் இவ்விவகாரத்தைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களில் 60 விழுக்காடு மட்டுமே விற்கப்படுகிறது என்றும் எஞ்சிய 40 விழுக்காடு அழுகி விடுவதாகவும் குறிப்பிட்ட மொகிதீன் அப்துல் காதர்r, அவற்றின் தரத்தை FAMA கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்