அப்துல் காதிர் சுலைமான் காலமானார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 –

முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியும், குறிப்பிடத்தக்க பல முன்னணி வழக்குகளை செவிமடுத்தவருமான அப்துல் காடிர் சுலாய்மான் காலமானார். அவருக்கு வயது 84.

நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனையில் கடந்த ஒன்பது நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அப்துல் காடிர் சுலாய்மான் க்கு , கடந்த புதன்கிழமை உயிரிழந்தாக அவரின் துணைவியார் னுர்மலா ராயா ஜுலிஹி தெரிவித்தார்.

ஒரு சட்டத்துறை வல்லுநரான அப்துல் காடிர் சுலாய்மான், நல்ல, ஒழுக்கமான மாமனிதர் ஆவார் என்று கூட்டசு நீதிமன்ற நீதிபதி ஹார்மைன்டர் சிங் டாலிவால் வர்ணித்துள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டில் நாட்டின் அப்பீல் நீதிமன்றம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதற்கு தலைமையேற்ற நீதித்துறையின் மூவேந்தர்களில் அப்துல் காடிர் சுலாய்மான் னும் ஒருவர் ஆவார்.
அப்துல் காடிர் சுலாய்மான் னுடன் இதர நீதிபதிகளான மறைந்த கோபால் ஸ்ரீ ராம் மற்றும் அலாவுடின் ஷேரிப் ஆகியோர் அப்பீல் நீதிமன்றத்தை அலங்கரித்த முதல் நீதிபதிகள் குழுவினர் ஆவர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்