அப்படி எந்தவொரு சட்டமும் இல்லை

ஷாஹ் அலாம், மே 18-

UiTM எனப்படும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை சேர்க்க முடியாது என்பதற்கு எந்தவொரு சட்டமும் இல்லை என்று மலேசிய வழக்கறிஞர்களுக்கான மனித உரிமை அமைப்பான Lawyers For Liberty திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதற்கு கூட்டரசு அரசிலமைப்புச் சட்டம் 153 ஆவது பிரிவின் உள்ளடக்கத்தை அந்த மனித உரிமை அமைப்பின் இயக்குநர் ஜெய்த் மாலேக் மேற்கோள்காட்டினார்.

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பூமிபுத்ரா மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட ஓர் உயர் கல்விக்கூடம் என்றும் / அப்பல்லைக்கழகத்தில் பூமிபுத்ரா மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று சட்டமே இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ். நேற்று திட்டவட்டமாக தெரிவித்து இருப்பது தொடர்பில் ஜெய்த் மாலேக் எதிர்வினையாற்றியுள்ளார்.

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கடைசி வரையில் பூமிபுத்ரா மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்றும், அதில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு இடமில்லை என்றும் அந்த அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அக்மால் சாலேஹ் உறுதியாக தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த Lawyers For Liberty அமைப்பின் இயக்குநர் ஜெய்த் மாலேக், மாரா தொழில்நுட்ப பல்லைக்கழக விவகாரம் தொடர்பில் நிறைய பேர் தவறாக வியக்கியானம் செய்து வருவதுடன், இவ்விவகாரத்தை திரித்துக் கூறி வருகின்றனர் என்று சுட்டிக்காட்டினர்.

சம்பந்தப்பட்ட தரப்பினர், தங்களின் அரசியல் நலனுக்காக தேசிய ஒருமைப்பாட்டை இரட்டடிப்புச் செய்யும் நோக்கில் அரசியலமைப்புச் சட்டத்தின் 153 ஆவது பிரிவை மேற்கோள்காட்டி அந்த பல்லைக்கழகத்தில் பூமிபுத்ரா மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று கூறி 1970 ஆம் ஆண்டிலிருந்து ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர் என்று ஜெய்த் மாலேக் விளக்கினார்.

உண்மையிலே அரசிலமைப்புச்சட்டத்தின் 153 ஆவது விதியில் அப்படி எதனையும் மேற்கோள் காட்டப்படவில்லை. ஆனால், அவ்வாறு இருப்பது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்று ஜெய்த் மாலேக் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்