உலு திராம் போலீஸ் நிலைய தாக்குதல், சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது

கோலாலம்பூர், மே 18-

நாடு முழுவதும் அமைதியான சூழல் நிலவினாலும் உலு திராம் போலீஸ் நிலையத்தில் நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் மற்றும் தாக்குதல் நடத்திய ஆசாமி கொல்லப்பட்டது ஓர் அரிய சம்பவம் என்றாலும் இதனை சாதாரணமாக கருதி விட முடியாது.

காரணம், இது போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை தடுக்க உடனடியாக, உரிய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்