Istana Negara-விற்குள் நுழைய முயற்சித்த இரு ஆடவர்கள் கைது, வெட்டுக்கத்தியை கைப்பற்றினர் போலீசார்

கோலாலம்பூர், மே 18-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை சந்திக்க வேண்டும் என்று கூறி, Istana Negara-விற்குள் நுழைய முயற்சி செய்த இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் அந்த இரு ஆடவர்கள் பயன்படுத்தியபெரோடுவா கெம்பரா- காரிலிருந்து போலீசார் வெட்டுக்கத்தியை கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்தது. அரண்மனையின் 3 ஆவது நுழைவாயிலில் நுழைவதற்கு முயற்சி செய்த 29 மற்றும் 37 வயதுடைய இரு நபர்களும் போலீசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.

அந்த இரு நபர்களும் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவர்கள் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ருஸ்டி முகமது இசா குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர்கள், 1958 ஆம் ஆண்டு அபாயகர வெடிப்பொருள் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் இன்று தொடங்கி, நான்கு நாட்களுக்கு தடுத்துவைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கைது நடவடிக்கை குறித்து எந்தவொரு ஆருடத்தையும் கூற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ருஸ்டி முகமது இசா, அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்