அமைச்சர் ஆரோன் அகோ டகாங்குடன் சந்திப்பு

நாளை மறுநாள் வியாழக்கிழமை ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆரோன் அகோ டகாங்- கை மலேசியத் தமிழர் சிந்தனைப் பேரவையின் தலைவர் முனைவர் பெரு.அ.தமிழ்மணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவொன்று, சந்தித்துப் பேச்சு வார்த்தையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

இந்நாட்டு இந்தியர்களின் இருநூற்றாண்டுக்கால சொத்துடமைக்கான முன்னோட்டம் குறித்து அமைச்சருடன் இக்குழு விவாதிக்குமென்று அக்குழுவின் செயலாளர் சிமு.விந்தைக்குமரன் கோடிகாட்டினார்.

இக்குழுவில் பொருளாதார ஆலோசகர் இரா.மாசிலாமணியுடன் சட்டவல்லுனர்களான டத்தோ- வீ. நடராஜன், ம. மதியழகன்-மற்றும் சமூக ஆய்வாளர்களான இரமணி கிருஷ்ணன், பி.கருப்பையா,- டாக்டர் குமரவேலு, இரா. தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்பதுடன், 25-க்கும் மேற்பட்ட தன்னார்வ இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன் அன்று நண்பகல் 12.00 மணிக்கு ஒற்றுமைத்துறை அமைச்சருடன் நடைபெறும்.
இச்சந்திப்பானது, வரலாற்றுப்பூர்வமான திருப்பங்களுக்கு, முக்கிய காரணமாக அமையக் கூடுமென்று சமூக வட்டங்களில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்