அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருக்கு எதிராகஇரண்டு போலீஸ் புகார்கள்

கோலாலம்பூர், ஏப்ரல் 05-

KK சூப்பர்மார்ட்- வர்த்தகத் தளத்தில் விற்பனை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய காலுறைகள் விவகாரத்தில் அந்த வர்த்தகத் தளத்தை புறக்கணிக்குமாறு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேஹ்- நிகழ்த்திய உரை தொடர்பில் அவருக்கு எதிராக இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் பேரில் 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இப்புகார்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

அந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருக்கு எதிராக தாங்கள் புலன் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணை முடிவடைந்தப் பின்னர், விசாரணை அறிக்கை சட்டட்த்துறை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படும் என்று டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

காலுறை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதால் இந்த காலுறை விவகாரம் மீதான சர்ச்சையை எழுப்ப வேண்டாம் என்ற பொது மக்களை கேட்டுக்கொள்வதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

முன்னதாக, அக்மால் சல்லே இன்று காலையில் சபா, கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

எனினும் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், நாளை சனிக்கிழமை கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அக்மால் சாலேஹ் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்