இந்திராகாந்தியின் விண்ணப்பம் தள்ளுபடி

புத்ராஜெயா, ஏப்ரல் 05-

தமது கடை மகள் பிரசன்னா டிக்சா-வை தேடிக் கண்டுபிடித்து, தம்மிடம் திரும்ப ஒப்படைப்பதில் தோல்விக் கண்டதாக கூறப்படும் போலீஸ் படைத் தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுப்பதற்கு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியையான எம். இந்திராகாந்தி செய்துக்கொண்ட விண்ணப்பத்தை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

பிரசன்னா டிக்சா-வை தேடி கண்டு பிடித்து , திரும்ப ஒப்படைப்பது தொடர்பில் போலீஸ் படை தலைவரை கட்டாயப்படுத்தும் உத்தரவை, கடந்த 2016 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்து இருக்கும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவுக்கு அப்பீல் நீதிமன்றம் கட்டுப்படுவதால், இந்திரகாந்தியின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி அஸிஸாஹ் நவாவி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

பிரசன்னா பராமரிப்பு உரிமை தொடர்பில் இந்திராகாந்திக்கும், இஸ்லாத்திற்கு மதம் மாறிய அவரின் கணவர் முகமட் ரிதுவான் அப்துல்லா என்ற கே. பத்மநாபனுக்கும் இடையில் நடைபெறும் சட்டப் போராட்டத்தில் சிவில் நீதிமன்றமும், ஷரியா நீதிமன்றமும் மாறுப்பட்ட தீர்ப்பையும், உத்தரவையும் பிறப்பித்து இருக்கின்றன.

எனவே பிரசன்னா டிக்சா-வை தேடி கண்டு பிடிப்பதில் ஐஜிபியை கட்டாயப்படுத்தும் உத்தரவை அமல்படுத்த இயலாது என்று கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அப்பீல் நீதிமன்றம் கருத்தில் கொள்வதாக அப்பீல் நீதிமன்ற நீதிபதி அஸிஸாஹ் நவாவி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்