அம்னோ சிறப்பு உச்சமன்றக்கூட்டத்தை கூட்டியது

முன்னாள் பிரதமரும் முன்னாள் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் சிறைத் தண்டனை தொடர்பில் மேல்முறையீட்டு வாரியம் தனது முடிவை நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அம்னோ தலைவர்கள் இன்று சனிக்கிழமை அம்னோவின் சிறப்பு உச்சமன்றக்கூட்டத்தை கூட்டியுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் கோலாலம்பூர், உலக வாணிப மைய கட்டத்தில் உள்ள அம்னோ தலைமையகத்தில் அதன் தலைவர்கள் திரண்டுள்ளனர். அம்னோவின் உதவித் தலைவர்களான காலிட் நோர்டின், ஜொஹாரி கனி, சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் ஆகியோர் காலையில் அம்னோ தலைமையகத்தில் காணப்பட்ட முக்கியத் தலைவர்களில் அடங்குவர்.

நஜீப்பின் தண்டனை காலம் 12 வருடத்திலிருந்து 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவு தொடர்பில் அம்னோ தலைவர்கள் முக்கியமாக விவாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்