ஆறு பிரதான நெடுஞ்சாலைகள் இன்று இரவு மூடப்படும்

2024 ஆம் ஆண்டு Sarawak Children’s Run Half Marathon – னை முன்னிட்டு கோலாலம்பூரை சுற்றியுள்ள 6 பிரதான நெடுஞ்சாலைகள் இன்று இரவு கட்டங்கட்டமாக மூடப்படும் என்று தெரியவந்துள்ளது.

இந்த மரோத்தோனில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினை சேர்ந்த 7,000 பேர் பங்கேற்கவுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் கூறினார்.

இந்நிகழ்வின் போது நகர மையம் உட்பட சுங்கை பெசி – உலு கெலாங், அம்பாங் – கோலாலம்பூர் ஆகிய இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்படுவதில் அடங்கும் என்று அல்லாவுதீன் தெரிவித்தார்.

பிரதான சாலைகள் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12:01 மணியளவில் மூடப்பட்டிருக்கும் வேளையில் இரவு 8:10 மணியளவில் பங்கேற்பாளர்கள் 21 கிலோமீட்டர், 11 கிலோமீட்டர், 6 கிலோமீட்டர் ஆகிய பிரிவின் அடிப்படையில் ஓடுவதற்கு தொடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்