அம்லா மற்றும் எம்ஏசிசி சட்டத்தின் கீழ் டைம் விசாரணை

முன்னாள் நிதியமைச்சர் டைம் சைனுடின்ஐ மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சட்டப்படி விசாரணை செய்து வருவதாகவும் அவரை அவ்வாணையம் கைது செய்ய வில்லை எனவும் எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

டைம் குற்றம் புரிந்திருப்பதாக எம்ஏசிசி எந்தவிதக் கூற்றையும் வெளியிட்டதில்லை, அவர் எம்ஏசிசி சட்டம் மற்றும் அம்லா சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அவ்வாணையம் குறிப்பிட்டுள்ளது.

பண்டோரா அறிக்கையின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் டைம் தொடர்பான விசாரணை அறிக்கையை எம் ஏ சி சி திறந்துள்ளது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள டைமிக்குச் சொந்தமான அனைத்து சொத்து விவரங்களை 30 நாட்களில் வெளியிட வேண்டும் என கடந்த 2023 ஜூன் 7 ஆம் தேதி அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

அந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என Daim கோரி இருந்த நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி, செப்டெம்பர் 11 ஆம் தேதி, அக்டோபர் 11 ஆம் தேதி, ஆகக் கடைசியாக நவம்பர் 14 ஆம் தேதி வரை அந்த நீட்டிப்பு தொடர்ந்தது.

அதனைத் தொடர்ந்து விசாரணையின் ஒரு பகுதியாக Menara Ilham பறிமுதல் செய்யப்பட, கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நோட்டீஸ் வெளியிடப்பட்டிருந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதில் தவறில்லை எனக் கூறிய எம் ஏ சி சி, அவரது நற்பெயருக்குக் களங்கம் இல்லை என நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டது.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் எந்தவிதமான யூகங்களையும் வதந்திகளையும் பகிர வேண்டாம் எனவும் அது விசாரணைக்குத் தடையாக இருக்கக் கூடும் எனவும் அவ்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்