தெலுக் கும்பாரில் வெளிநாட்டுத் தொழிலாளர் விடுதியை எதிர்க்கும் மக்கள் !

பினாங்கு பாயான் லெப்பாஸ், தெலுக் கும்பார் பகுதியில் கட்டப்பட இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர் தங்கும் விடுதித் திட்டத்தை எதிர்த்து ஏறத்தாழ ஆயிரம் பேர் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

அந்தத் தங்கும் விடுதி கட்டப்படுமேயானால், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அங்கு குடியிருப்பார்கள் எனவும் தற்போதுல்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் அது இரண்டு மடங்காக இருக்கும் எனவும் உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகின்றனர்.

அப்பகுதியில் அதிகரிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் நிலை உள்ளதாகவும் ஏற்கெனவே வெளிநாட்டுத் தொழிலாளர்களால் தொந்தரவுக்கு உள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

அதே சமயம், பெருகி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்தவித நன்மையிம் ஏற்படாது என மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இட்ரீஸ் சாலே தெரிவித்தார்.

கோடிக்கணக்கான பணம் நாட்டை விட்டு வெளியில் செல்லும். இதனால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றார்.

அந்த அமைதி மறியலுக்கு ஆதரவளிக்க அம்னோவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஃபாரிட் சா’ஆட் கலந்து கொண்டார். குறுகலான அந்தப் பகுதியில் தொழிற்சாலை பேருந்து உள்ளே நுழைந்தால் போக்குவரத்து நெரிசலை மோசமடையச் செய்யும் எனக் குறிப்பிட்டார்.

தொழிற்பேட்டைப் பகுதியில் அமைக்கப்பட வேண்டிய தொழிலாளர் தங்கும் விடுதிக்கு அப்பகுதி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும், நகராண்மைக் கழகம் ஏன் தெலுக் கும்பாரில் கட்டப்பட அனுமதி அளித்தது எனவும் ஃபாரிட் சா’ஆட் கேள்வி எழுப்பினார்.

இந்தத் தங்கும் விடுதி அமைக்கப்படுவது குறித்து ஏற்கெனவே, மலேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த இரவீந்தரும் தமது எதிர்ப்பைத் தெர்வித்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்