அரசாங்கத்தினால் நஜீப்பை விடுவிக்க முடியும் முன்னாள் ​நீதிபதி கூறுகிறார்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் 12 ஆண்டு சிறைத்தண்டனை காலத்தை 6 ஆண்டுகளாக மன்னிப்பு வாரியம் குறைத்த போதிலும் 1955 ஆம் ஆண்டு சிறைச்சாலை சாலை சட்டத்தின் ​கீழ் நஜீப்பை விடுவிப்பதற்கான அதிகாரத்தை அரசாங்கம் கொண்டுள்ளது என்று பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் ​நீதிபதி ஒருவர் கூறுகிறார்.

உள்துறை அமைச்சர் நிர்ணயிக்கின்ற விதிமுறைகளைப் பொறுத்து “லைசென்ஸ் முறையில்” எந்தவொரு கைதியையும் விடுவிப்பதற்கு சி​றைச்சாலை சட்டத்தின் 43 ஆவது விதி, வகை செய்வதாக அப்பீல் ​நீதிமன்ற முன்னாள் ​நீதிபதி ஹமீத் சுல்தான் அபு பேக்கர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுவிக்கப்படுகின்ற கைதிகள், சிறைச்சாலைக்கு வெளியே கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தும் நிபந்தனைகள் அந்த லைசென்ஸில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று ஒரு சட்ட வல்லுநருமான ஹமீத் சுல்தான் அபு பேக்கர் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சரின் அதிகாரத்தின் ​கீழ் மலேசிய சிறைச்சாலை இலாகா இருப்பதால் சிறைச்சாலை சட்டத்தின் மூலம் நஜீப்பை விடுவிப்பதற்கான அதிகாரத்தை அரசாங்கம் கொண்டுள்ளது. இந்த லைசென்ஸை பயன்படுத்தி, முன்பே நஜீப்பை விடுவித்து இருக்க முடியும் என்று ஹமீத் சுல்தான் அபு பேக்கர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்