மாணவனை கொலை செய்ததாக மூத்த அதிகாரி 30 நாட்கள் விசாரணை

ஈப்போ , மே 14-

17 வயது பதின்ம வயது இளைஞனை கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் மூத்த போலீஸ் அதிகாரியிடம் 30 நாட்கள் விசாரணை மேற்கொள்ள ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணையை வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி வரையில் நிர்ணயிக்க நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குச்சரன் சிங் ப்ரீத் தெரிவித்தார்.

முன்னதாக, குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 46 வயது முகமது நஸ்ரி அப்துல் ரசாக் என்கிற அந்த மூத்த போலீஸ் அதிகாரி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது குற்றம் புரியவில்லை என்று கூறியதுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கை மறுபரிசீலனை செய்வதற்கு வரும் ஜூலை 1 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி பிற்பகல் 12.40 மணியளவில் ஈப்போ, செக்கோலா மெனெங்கா கேபாங்சான் ஜாத்தி அருகிலுள்ள ஜாலான் தாமான் ஜாத்தி 1 -யில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்