அரச மலேசிய கடற்படை இராணுவத்திற்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் உயிரிழந்தனர்

பேராக், ஏப்ரல் 23-

அரச மலேசிய கடற்படை இராணுவத்திற்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் பயிற்சியின் போது, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதில், விமானிகள் உட்பட 4 பணியாளர்கள், 3 பயணிகள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மலேசிய கடற்படை இராணுவத்தின் 90ஆவது ஆண்டு கொண்டாட்ட விழா அடுத்த மாதம் மே 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அந்த விழாவை முன்னிட்டு இன்று காலையில் பேராக், மஞ்சுங், லுமுட்டிலுள்ள இராணுவ முகாமில் பயிற்சி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை மணி 9.03 அளவில், சித்தியவான் திடலிலிருந்து புறப்பட்ட HOM மற்றும் Fennec ஆகிய இரு ஹெலிகாப்டர்கள், இராணுவ முகாம் உள்ள பகுதியினுள் பறந்துக்கொண்டிருந்த போது, ஒன்றோடு ஒன்று மோதியது.

அச்சம்பவம் தொடர்பில், காலை மணி 9.50 அளவில் அவசர அழைப்பை பெற்றதை அடுத்து, தங்கள் தரப்பு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பேராக் தீயணைப்பு மீட்பு துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தை வந்தடைந்த போது, இரு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகியது கண்டறியப்பட்டது. அதில், ஒரு ஹெலிகாப்டரில் பயணித்திருந்த மூவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு ஹெலிகாப்டரில் எழுவர் பயணித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

தற்போது, ஹெலிகாப்டரினுள் சிக்கியுள்ளவர்களை வெளியே கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பேராக் தீயணைப்பு மீட்பு துறை அதன் அறிக்கையில் கூறியிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்