எரிமலை வெடிப்பு காற்று தூய்மைக்கேட்டை பாதிக்கவில்லை

கோலாலம்பூர், ஏப்ரல் 23-

சுலவேசி- வில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த ருவாங் எரிமலை வெடிப்பு சம்பவ தொடர்பில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் காற்றின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் டத்தோ வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாஃபா தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட எரிமலை வெடிப்பின் புகை மற்றும் தூசி ஆகியவை சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களையும் பாதிப்படைய செய்யவில்லை என்பதுடன் காற்று மாசு குறியீடு (IPU) -வின் அளவு காற்றுத் தூய்மைக்கேட்டை விளைவிக்கும் வகையில் இல்லை என்று வான் அப்துல் கூறினார்.

நேற்று இரவு மேற்கொண்ட ஆய்வில் 21 இடங்கள் நல்ல காற்றின் தரம் நிலையை பதிவு செய்ததாகவும், மேலும் 47 இடங்கள் மிதமான காற்றின் தர நிலையை பதிவு செய்திருப்பதாகவும் அவர் தகவல் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்