அரை மில்லியனுக்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல்

புத்ராஜெயா, ஏப்ரல் 05-

நாடு முழுவதும் கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் நேற்று வரையில் மேற்கொண்ட ஓப்ஸ் பன்த்தாவு 2024 திடீர் சோதனையின் போது பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 956 வெள்ளி ரொக்கப்பணத்தை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சகம் கைப்பற்றியுள்ளது.

ரமடான் பசார், ஐடில்பிற்றி பசார், பொதுச் சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகள், ஆன்லைன் விற்பனை உள்ளிட்ட 38,126 வளாகங்களை சோதனை செய்தததன் மூலம் குறிப்பிடப்பட்ட ரொக்க தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்தோ அர்மிசன் மோஹட் அலி தெரிவித்தார்.

இதுக்குறித்து சுமார் 1,216 புகார் கிடைக்க பெற்றதை தொடர்ந்து அவ்விடத்தில் சோதனையிடுவதற்கு திட்டமிடப்பட்டதாக அர்மிசன் மோஹட் மேலும் தெளிவுப்படுத்தினார்.

விலை குறியீடுகளை வைக்க தவறுதல், சட்டவிரோத எடை கருவிகளை பயன்படுத்துதல், சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய குற்றப்பதிவுகள் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அர்மிசன் மோஹட் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்