2.4 மில்லியன் வாகனங்கள் பினாங்கில் நுழையும் என்று எதிர்பார்க்கபடுகின்றது

புக்கிட் மேர்த்தாஜாம், ஏப்ரல் 05-

நோன்பு பெருநாளை முன்னிட்டு 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பினாங்கு மாநிலத்தில் நுழையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக பினாங்கு துணை காவல்துறைத் தலைவர் டத்தோ மொஹமட் உசோப் ஜான் மொஹமட் தெரிவித்தார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சீரான போக்குவரத்து மற்றும் பயனர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் போக்குவரத்து பிரிவை சேர்ந்த அதிகாரிகளை அதிகரித்திருப்பதாக மொஹமட் உசோப் கூறினார்.

பொதுவாகவே பினாங்கில் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களின் விகிதம் 1.2 மில்லியனை அடைகின்ற போதிலும் நோன்பு பெருநாள் காலங்களில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் அம்மாநிலத்தில் காணமுடியும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

பயனர்களின் சீரான பயணங்களை உறுதி செய்வதற்கு மொத்தம் 308 அதிகாரிகள் பணியில் ஈடுபடவுள்ளதாக மொஹமட் உசோப் மேலும் தகவல் வெளியிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்