வெப்ப தாக்குதல் பக்கவாதத்தினால் 3 வயது குழந்தை உயிரிழந்தது

கோலாலம்பூர், ஏப்ரல் 05-

வெப்ப தாக்குதல் பக்கவாதத்தின் காரணமாக இவ்வாரம் மேலும் ஒரு மரண சம்பவம் பதிவாகியிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமான (நட்மா) தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி கிளந்தானில் மூன்று வயது குழந்தை ஒன்று வெப்ப தாக்குதல் பக்கவாதத்தின் காரணமாக உயிரிழந்ததாக அது ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

முன்பாக, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பகாங்கில் 22 வயதுடைய இளைஞன் இதே சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு மரணமுற்ற வேளையில் இது தற்போது அடுத்தவொரு சம்பவமாக பதிவாகியுள்ளதாக நட்மா அறிவித்திருந்தது.

அதிகமான வெப்பம் தொடர்பான நோய்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வரையில் 37 ஆக உயர்ந்துள்ளது. அதில் 10 வெப்ப தாக்குதல் பக்கவாதம், 26 வெப்ப சோர்வு மற்றும் ஒரு வெப்ப வலிப்பு ஆகியவை என்று நட்மா கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்