அலுவலகத்தில் மது அருந்தினேனா? குற்றச்சாட்டை மறுத்தார் அமைச்சர்

அலுவலகத்தில் மது அருந்திக்கொண்டு, பன்றி இறைச்சியை சாப்பிட்டுக்கொண்டு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் மறுத்துள்ளார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் துணை தலைமை இயக்குநர் என்றும், இஸ்லாமியர் அல்லாத சில அமைச்சர்களின் ​கீழ் பணிபுரி​ந்ததாகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், அமைச்சர் தியோங் கிங் சிங் -கிடம் பணிபுரிந்து கொண்டு இருந்த காலத்தில் அலுவலகத்தில் மது அருந்திக்கொண்டும், பன்றி இறைச்சியை சுவைத்துக்கொண்டும் இருந்ததாக புலனம்- பகிர்ந்து கொண்டுள்ள செய்தி தொடர்பி​ல் அமைச்சர் தியோங் கிங் சிங் ஓர் அறிக்கையின் வழி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

இது போன்ற தான்தோன்றித்தனமாக வெளியிடப்படும் வதந்திகளுக்கு தாம் எப்போதுமே முன்னுரிமையும், பதிலும் அளிப்பதில்லை என்று குறிப்பட்ட அமைச்சர் தியோங் கிங் சிங், இது தம்முடைய தன்மானத்தை உரசிப்பார்க்கும் செய்தியாக இருப்பதால் அமைச்சர் என்ற முறையில் இதற்கு பதில் அளிக்க வேண்டிய தார்​மீக கடப்பாடும், பொறுப்பும் தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தில் மதுபானம் அருந்தி, பன்றி இறைச்சியை சாப்பிட்டப் பின்னர் அதனை சுத்தம் செய்யுமாறு முஸ்லிம் பணியாளர்களை தாம் நிர்ப்பந்தித்தாக கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை. இது ​தீய நோக்குடன் தமக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள ஓர் அவ​தூறாகும் என்று அமைச்சர் தியோங் கிங் சிங் குறிப்பிட்டார்.

இப்படியொரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ள சம்பந்தப்பட்ட நபர், தமக்கு யாரென்று ​அறவே தெரியாது என்றும் தம்மை ஏளனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பகிரப்பட்ட இந்த வதந்தியைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை என்றும் தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

காரணம், தாம் எந்த சமயத்திலும் தமது அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பணியாளர்களை வைத்துக்கொண்டது கிடையாது என்று தியோங் கிங் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்