எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு; விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்

புத்ராஜெயா- மார்ச் 21

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் விரைவில் அதன் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அதில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டுச்செல்லப்படுமென துணைப்பிரதமர் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார்.

தாம் முதலில் எதிர்க்கட்சியான டத்தோ ஶ்ரீ தகியூட்டின் ஹாசன்-ன்னைச் சந்தித்து பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர், அமைச்சரவையிடமிருந்து உத்தரவு கிடைத்த பிறகு, அத்தரப்பினருடன் பேச்சுவார்த்தைச் நடத்தப்படும். தேவை ஏற்பட்டால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்றும் அமைக்கப்படும் என அவர் கூறினார்.

அண்மையில், எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுதீன் உள்பட அதன் மூன்று தலைவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பு குறித்து கருத்துரைக்கையில், Datuk Seri Fadillah Yusof அந்த தகவலை வெளியிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்