அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனை விவகாரத்தில் சுயமாக சட்டத்தை கையில் எடுத்த தரப்புகள் மீதும் நடவடிக்கை தேவை! வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

கோலாலம்பூர், மார்ச் 24 –


அல்லா சொல் கொண்ட சர்ச்சைக்குரிய காலுறை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், சில தரப்பினர் அவர்களாக சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டுள்ளனர் என சில வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

அவர்களின் அச்செயல்கள் காரணமாகவே இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திய சியோக் வாய் லூங் மற்றும் ரிக்கி ஷான்ன் சாகாம்பாங் ஆகிய இருவரும் 1998 தொடர்ப்பு பல்லூடக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, போலீசுக்கு முன்பாக, அவ்விரு நபர்களை சந்தித்து அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொள்ள செய்த நபர்கள் மீது அமலாக்க தரப்பு விரைந்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சட்ட நடைமுறை, பெரும்பான்மை மக்களின் நலன்களை மட்டுமே தற்காப்பது போல் ஆகிவிடும் என வழக்கறிஞர் ஏன்ரு கூ மலேசிய கினி செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார்.

அதே கருத்தை முன்வைத்த பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான Hassan Karim, போலீஸ் செய்ய வேண்டிய வேலையை,தாமாகவே எடுத்து செயல்பட்ட தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்களது அந்நடவடிக்கை சட்டரீதியில் தவறானது எனவும் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்