பாடுவில் பதிக்கப்படும் அனைத்து தகவல்களும் பாதுகாப்பானது மேலும் அதன் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் மலேசியர்கள் அச்சைமடைய தேவையில்லை!

கோலாலம்பூர் மார்ச் 24 –


நாட்டின் முதன்மை தரவு தளமான பாடுவில் பதிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பாதுகாபானது மட்டுமின்றி அதன் தகவல் ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ மொகமாட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேசிய இலக்கவியல் துறை நிறுவனம் பராமரித்துவரும் அந்த தளத்தில் இதுவரையில் தகவல் கசிவுகள் ஏதும் ஏற்படவில்லை என மலேசிய புள்ளியியல் துறை தலைவர் டத்துக் ஶ்ரீ டாக்டர் மொகமாட் உசிர் மஹிடின் கூறினார்.

ஒருவேளை எதிர்பாரா்விதமாக தகவல் கசிவுகள் ஏற்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் கீழ்,பொதுத்துறை இணைய பாதுகாப்பு நடவடிக்கைக் குழு வாயிலாக பாடு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

ஆகையால் , மலேசியர்கள் பாடுவில் தங்களின் விவரங்களைப் பதிவதற்கு இறுதி நிமிடம் வரையில் காத்திருக்காமல் விரைந்து பதிந்துக்கொள்ளும்படி, டத்துக் ஶ்ரீ டாக்க்டர் மொகமாட் உசிர் மஹிடின் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்