மடானி அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ளப்பட்ட பேரணி கண் துடைப்பு அல்ல! – பெர்சே விளக்கம்

கோலாலம்பூர், மார்ச் 24 –


சீர்த்திருத்த கொள்கைகளை விரைந்து அமல்படுத்தும்படி, கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கோலாலம்பூரிலுள்ள நாடாளுமன்ற கட்டட நுழைவாயிலின் முன்புறம் மேற்கொண்டிருந்த #Reformasi100Peratus பேரணி கண் துடைப்பானது அல்ல என தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பெர்சே தலைவர் பைசால் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

பெர்சேவின் இதற்கு முந்தைய பேரணிகளில் பங்கேற்றவர்கள் பக்காத்தான் ஹாராப்பான் னின் ஆதரவாளர்கள் என்பதை ஒப்புக்கொண்ட அவர், அதற்காக, அரசாங்கத்திடம் சீர்த்திருத்த கொள்கைகளை அமல்படுத்தும்படி கேட்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்றார்.
சம்பந்தப்பட்ட பேரணியின்போது வழங்கப்பட்டிருந்த மனுவில், தேர்தல் நடைமுறை மற்றும் முதன்மை கழகங்களில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, உயரிய செல்வாக்கு உடைய தலைவர்களின் வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் போது, அவர்களை விடுதலை இன்றி நிபந்தனையில் விடுவிக்கும் நடைமுறையும் சட்ட பாகுபாடுகளும் நிறுத்தப்பட வேண்டுமெனவும் பெர்சே கூறியிருந்தது.

இதற்கிடையே, பெர்சே இயக்கத்தை முன்பு வழிநடத்தியவர்கள் தற்போது மடானி அரசாங்கத்தில் உள்ளதால், அத்தலைவர்கள் வாக்குறுதி அளித்தது போல், சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளாமல் இருப்பதை பெர்சே கண்டும் காணாமல் இருக்கும் என பெர்சத்துவின் தகவல் பிரிவு தலைவர் ரசாலி இட்ரிஸ் கூறியிருந்த கூற்றை திட்டவட்டமாக மறுத்த பைசால் அப்துல் அசிஸ், பெர்சே கண்மூடித்தனமாக அரசாங்கத்தை ஆதரிக்காது என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்