அஸாம் பாக்கியின் நியமனத்திற்கு எதிர்ப்பு

கோலாலம்பூர், மே 15 –

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசாம் பாக்கியின் ஒப்பந்தப் பணிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதற்கு லஞ்ச ஊழலை எதிர்த்து போராடும் அரச சாரா இயக்குமான C4 அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அஸாம் பாக்கியின் இந்த மறு நியமனமானது, லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்பு அறிவித்தது எதுவும் நடக்கப் போவதில்லை என்று அந்த C4 அமைப்பு சாடியுள்ளது.

லஞ்ச வேர்களை வேரறுக்கும் எஸ்.பி.ஆர்.எம் போன்ற ஆணையத்திற்கு தலைமை ஆணையராக நியமிக்கப்படும் பொறுப்பாளர்களின் பெயர்கள் நாடாளுமன்ற சிறப்பு தேர்வுக்குழு வாயிலாக நாடாளுமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று C4 அமைப்பு, அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்