போலி மருத்துவரிடம் பணத்தை இழந்ததாக மாது புகார்

கோலாலம்பூர், மே 15 –

கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு கிளினிக்கில் போலி மருத்துவரிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் காரணமாக தமக்கு 25 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக 33 வயது மாது ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

முகநூலில் காணப்பட்ட ஒரு விளப்பரத்தை பார்த்து, அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த போலி டாக்டரிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டாகவும், ஆனால், அது உண்மையான அறுவை சிகிச்சை அல்ல என்றும், இதனால் தாம் உடல் ரீதியாக பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் ஆலிஸ் லூ என்பவர் தெரிவித்துள்ளார்.

அந்த கிளினிக் சட்டப்பூர்வமானது என்றாலும் தனக்கு அறுவை சிகிச்சை என்ற பெயரில் மருத்துவம் பார்த்த அந்த டாக்டர் போலியானவர் என்று சம்பந்தப்பட்ட மாது புகார் கொடுத்துள்ளார் என்று மலேசிய அனைத்துக சமூக மனித உரிமை அமைப்பு, இவ்விவகாரத்தை இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்