ஆசிரியர் தினத்தையொட்டி மாமன்னர் தம்பதியர் வாழ்த்து

குவாந்தான், மே 15-

இன்று வியாழக்கிழமை, ஆசிரியர் தினத்தை கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தங்களின் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஆசிரியர்களின் தியாகங்கள் மற்றும் சேவைகள் எப்போதும் நினைவுக்கூறப்பட வேண்டும். தேசத்தையும் சமூகத்தையும் வளர்ப்பதில் ஒவ்வொரு ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்று முகநூல் அகப்பக்கத்தில் மாமன்னர் தம்பதியர் கூறினர்.

எங்களுக்கு கல்வி கற்பித்து கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி. அவர்களின் அறிவும் பக்தியும் என்றென்றும் எங்களின் நினைவில் நிலைத்து நிற்கும் என்று மாமன்னரும் பேரரசியாரும் குறிப்பிட்டனர்.

இவ்வாண்டின் கருப்பொருள் ‘Guru Jauhari Digital, Aspirasi Negara MADANI’ என்று கல்வி அமைச்சகம் அறிவித்திருந்த வேளை குவாந்தானில் உள்ள புசாட் கொன்வென்சியென் அந்தரபங்சா சுல்தான் அகமது ஷா -வில் இன்று ஆசிரியர் தின கொண்டாட்டம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்