வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் பெண்களின் செயல்பாடு அம்பலமானது

கோலாலம்பூர், மே 15-

வாடிக்கையாளர்களுக்கு சேவை பெண்களாக இருந்துவரும் வெளிநாட்டு பிரஜைகளின் நடவடிக்கைகள் அவ்விடத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் மூலம் அம்பலமானது.

நேற்று இரவு 11.45 மணியளவில் தலைநகரில் உள்ள இரண்டு பொழுதுபோக்கு மையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் இந்நடவடிக்கையை வெற்றிகரமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இச்சோதனையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை பெண்களாக இருக்கும் 32 வெளிநாட்டு பெண்களும் வளாகத்தின் பராமரிப்பாளர்களான இரண்டு உள்ளூர் ஆண்களும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைவர் டத்தோ ஹபிபி மஜின்ஜி கூறினார்.

அப்பெண்கள் குடிநுழைவு அட்டையை தவறாக பயன்படுத்தியதாகவும் சட்டவிரோதமாக செயல்பட்டதற்காகவும் கைது செய்யப்பட்டதாக ஹபிபி மஜின்ஜி அறிவித்தார்.

மேலும், பொழுதுபோக்கு மையத்தின் உரிமம் இல்லாமல் செயல்பட்டதற்காகவும் சட்டவிரோதமாக வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதற்காகவும் அந்த வளாகத்தின் பராமரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்