ஆடவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

போர்ட் டிக்சன், மார்ச் 11 –

மிக அபாயகரமாக வாகனத்தை செலுத்தி முதியவர் ஒருவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 20ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

23 வயது G. கிருஷ்ணகுமார் என்ற அந்த ஆடவர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கானி இத்தண்டனையை விதித்தார்.

கிருஷ்ணகுமாரின் வாகனமோட்டும் லைசென்ஸ், 5 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டதுடன், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் அவருக்கு மேலும் ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் தேதி இரவு 10.35 மணியளவில் போர்ட்டிக்சன், Jalan Seremban சாலையில் 5 ஆவது கிலோ மீட்டரில் தனது வாகனத்தில் முதியவர் ஒருவரை மோதித்தள்ளி மரணம் விளைவித்ததாக கிருஷ்ணகுமார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஒரு துப்பரவு பணியாளரான கிருஷ்ணகுமார் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்