ஆடவருக்கு 6 மாத சிறை; வெ.12,000 அபராதம்.

கோலாலம்பூர், மார்ச் 22.

நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘அல்லா’ சொல் கொண்ட காலுறையை பிரபல KK மார்ட் கடை விற்பனை செய்திருந்ததை கேலி செய்திருந்த ஆடவருக்கு கோலாலம்பூர் சேசியேன் நீதிமன்றம் 6 மாதச் சிறைத்தண்டனையும் 12 ஆயிரம் வெள்ளி அபராதத்தையும் விதித்துள்ளது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, குற்றச்சாட்டப்பட்டிருக்கும்35 வயதுடைய சியோக் வேய் லூங் பேஸ்புக் பதிவில் அவ்விவகாரத்தை கேலியாக பதிவிட்டிருந்த நிலையில், போலீசார் அவரைக் கைது செய்திருந்தனர்.

இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

தனது அச்செயலுக்காக மன்னிப்பு கோரிய சியோக் வேய் லூங் , மற்றவர்களின் சமயத்தை இழிவுபடுத்தும் நோக்கில் அவ்வாறு பதிவிடவில்லை என்றார்.

அவரை எந்தவொரு வழக்கறிஞரும் பிரதிநிதிக்காத சூழலில், நீதிபதி சுசானா ஹஸ்ஸின் அவ்வாடவருக்கு அந்த தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்