துளியும் நேரமில்லை; பள்ளி வேன் ஓட்டுநர்கள் கூறும் காரணம்.

சிலாங்கூர், மார்ச் 22.

சிலாங்கூரில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சாலை போக்குவரத்து சோதனைகளில், ஓட்டுநர் உரிமங்களைக் கொண்டிருக்காத பள்ளி வேன் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில், 72 பள்ளி பேருந்துகள், 34 வாகனங்கள், உட்பட 53 குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன.

ஓட்டுநர் உரிமம் இல்லாதது, சாலை வரியைப் புதுப்பிக்காதது, பாதுகாப்பு காப்புறுதியைக் கொண்டிருக்காதது மற்றும் இதர குற்றங்களுக்காகவும் அந்த குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணம் அதிகம்; அதிகமான வேலைப் பணிகளால் ஓட்டுநர் உரிமம் எடுக்க நேரமில்லை. இவ்வாறாக பல அலட்சியமான காரணங்களை தனியாருக்கு சொந்தமான வேன் ஓட்டுநர்கள் கூறுவதாக சிலாங்கூர் சாலை போக்குவரத்து துறை இயக்குநர் ஆஸ்ரின் பொர்ஹான் கூறினார்.

பள்ளி வேன் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் விரைந்து ஓட்டுநர் உரிமத்தைப் பெற வேண்டுமென நினைவுறுத்திய அவர், தமது தரப்பு இதுக்குறித்து அடிக்கடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்