தீ விபத்தில் 286 பேர் நிவாரண மையத்தில் தங்கியிருத்தல்

தாவாவ்,, மார்ச் 7 –

கம்பூங் தன்ஜோங் பாத்து லாவுட் லொக்போன்ட் டில் நிகழ்ந்த தீ விபத்தில் இன்று காலை 8 மணி வரையில் 286 பேர் உள்ளடங்கிய 81 குடும்பங்கள் டேவான் செர்பாகூனா கொம்லேக்ஸ் சுக்கான் தாவாவ் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்விடத்தில் டேவான் ஓதி மொகமாட் ஜந்தான் தன்ஜோங் பாத்து டாராட் என்கிற மற்றொரு நிவாரண மையமும் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் தங்க வைக்கப்படவில்லை என்றும் சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

குறிப்பிடப்பட்ட இரண்டு நிவாரண மையங்களும் நேற்று இரவு 8 மணியளவில் திறக்கப்பட்டதாகவும் மேலும் வெளியேற்றப்படும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறியிருந்தது.

முன்னதாக ஊடகங்கள், நேற்று மதியம் 2:30 மணியளவில் கம்பூங் தன்ஜோங் பாத்து லாவுட் லொக்பொன்ட் டில் நிகழ்ந்த தீ விபத்தில் 45 வீடுகள் தீயில் எரிந்து நாசமானதாக செய்தி வெளியிட்டிருந்தன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்