ஆடவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது

ஜொகூர் பாரு, ஏப்ரல் 13-

ஜோகூர் பாரு, சுங்கை டாங்கா பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த ஆடவர் ஒருவரை தேடும் பணியை தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் போலீசார் முழு வீச்சில் தொடங்கியுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் ஆடவர் ஒருவர், சுங்கை டாங்கா பாலத்திலிருந்து ஆற்றில் குதித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த தேடுதல் பணி கடந்த இரண்டு நாட்களாக முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த சிறிது நேரத்திலேயே ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 21 போலீஸ்காரர்கள், லார்கின் தீயணைப்பு,மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 வீரர்கள், அந்த ஆடவரை தேடும் பணியில் ஈடுபட்டதாக பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

அந்த ஆடவர் ஆற்றில் குதித்த பகுதியிலிருந்து கம்போங் சுங்கை மெலாயு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அளவில் தேடுதல் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பல்வீர் சிங் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்