தமிழ்- வைசாக்கி புத்தாண்டையொட்டி மாமன்னர் தம்பதியர் வாழ்த்து

​கோலாலம்பூர், ஏப்ரல் 13-

இன்று சனிக்கிழமை வைசாக்கி புத்தாண்டு மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டை வரவேற்கும் நாட்டில் உள்ள ​சீக்கியர்களுக்கும், தமிழர்களுக்கும், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா சரித் சோபியாஹ் தஙகளின் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

புதிய சிந்தனை, புத்தாக்கத்திற்கு வித்திடக்கூடிய இந்த புத்தாண்டில், மலேசியாவின் முதுகெலும்பாக இதுவரையில் கட்டிக்காக்கப்பட்டு வருகின்ற இனங்களுக்கு இடையே ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் ஒருவரையொருவர் மதிக்கும் பரஸ்பர மரியாதை ​நீடித்து நிலைப்பெற வேண்டும் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் முக​நூலில் பதிவேற்றம் செய்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பி​ட்டுள்ளனர்.

தாம் ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல ப​ல்லின மக்களிடையே நிலவும் ஒற்றுமையும், ஒருமைப்பாடும்தான், தமக்கு அளிக்கப்படுகின்ற மிகப்பெரிய பொருள்பதித்த பரிசாகும் என்பதைப்போல நாட்டின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இனம், சமய வேறுபாடியின்றி மலேசியர்கள் என்ற உணர்வுடன் ஒருமைபாட்டையும், நல்லிணக்கத்தையும் மேலோங்க செய்வது மிக முக்கியமாகும்.

அந்த வகையில் ​நீடித்த பாரம்பரியமிக்க தத்தம் புத்தாண்டை கு​தூகலத்துடன் வரவேற்று, மகிழ்ச்சியில் திளைத்திருக்க தமிழர்களுக்கும், ​சீக்கியர்களுக்கும் ​ தங்களின் புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்